Home jaffna news யாழில் கோவிட் தொற்றால் 8 நாட்களில் 36 பேர் மரணம்

யாழில் கோவிட் தொற்றால் 8 நாட்களில் 36 பேர் மரணம்

கோவிட் பரவல் வடக்கு மாகாணத்தில் சமூகத் தொற்றாகப் பரவிவிட்டது என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவத்துறையின் தலைவர் பேராசிரியர் மனுஜ் சி. வீரசிங்க தெரிவித்திருந்த நிலையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட் வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களது எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

கடந்த 8 நாட்களில் மட்டும் 36 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

யாழ். மாவட்ட செயலகத்தின் கோவிட் புள்ளிவிபர அறிக்கையின் அடிப்படையில் இவ்விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், ஆகஸ்ட் 22ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரையிலான 08 நாட்களில் இவ்வாறு 36 கோவிட் மரணங்கள் யாழ். மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளன.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 236ஆக உயர்வடைந்துள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  கணவன் வைத்த பெற்றோல் போத்தலை அறிந்திராத மனைவி! தீப்பிடித்துப் பரிதாபச் சாவு
Previous articleபுதிய நோய் அறிகுறிகளுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவர்கள்
Next articleவிஷப்பாம்பை ஏவி கட்டிலில் படுத்திருந்த 25 வயதான மனைவியை கொன்ற கணவன்.