Home Local news மேலும் 7 பிளாஸ்டிக் உற்பத்திகளை தடை செய்ய திட்டம்!

மேலும் 7 பிளாஸ்டிக் உற்பத்திகளை தடை செய்ய திட்டம்!

ஒரு முறை பாவித்து நீக்கப்படும் 7 வகையான பிஸாட்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்திகளை தடை செய்வதுடன் தொடர்புடைய அமைச்சரவை பத்திரம் ஒன்று நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இவற்றினுள், பிலாஸ்டிக்கினால் தயாரிக்கப்படும் பானம் உறிஞ்சான், முட்கரண்டி, குடிநீர் கோப்பை, கேக் வெட்டும் கத்தி, கத்தி, இடியப்பத் தட்டு மற்றும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீனினால் தயாரிக்கப்பட்ட பூ மாலைகள் ஆகியன உள்ளடங்குகின்றன.

கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதியில் இருந்து ´செசே´ பெக்கெட்டுகள் உள்ளிட்ட ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிலாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்திப் பொருட்களை தடை செய்ய சுற்றுச்சூழல் அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.

அதேபோல், ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியில் இருந்து உக்காத லன்ச்சீ்டடை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் ஆண்டுதோறும் 2 பில்லியனுக்கும் அதிகமான பொலித்தீன் பைகள் கொட்டப்படுவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட உளவு இயந்திரங்கள் பறிமுதல்
Previous articleதடுப்பூசியை போட மறுப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கை
Next articleகொவிட் தொற்றுக்கு 192 பேர் பலி; இதுவரை 8775 பேர் உயிரிழப்பு!