Home Local news தடுப்பூசியை போட மறுப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கை

தடுப்பூசியை போட மறுப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கை

ஊரடங்கு உத்தரவை மீறுவோரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதன் மூலம் மட்டும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தலதுடுவ தெரிவித்தார்.

தடுப்பூசி பெற மறுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். டெல்டா வைரஸ் மிகவும் அபாயகரமானது என்பதுடன் வேகமாகப் பரவுகின்றது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இதை நாட்டு மக்களால் மட்டுமே தடுக்க முடியும் என்று கூறிய அவர், அவசரத் தேவை தவிர வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வலியுறுத்தினார்.

முகக்கவசம் அணியாதவர்களை நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லும் போது கொரோனா கட்டுப்பாட்டில் இல்லை என்றும் ஒவ்வொருவரும் சுய ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  முல்லை வைத்தியரின் விபரீத முடிவு
Previous articleதனியார்த்துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
Next articleமேலும் 7 பிளாஸ்டிக் உற்பத்திகளை தடை செய்ய திட்டம்!