Home Local news புதுக்குடியிருப்பின் பரிசோதனை முடிவுகள் அதிர்ச்சியளிக்கின்றன

புதுக்குடியிருப்பின் பரிசோதனை முடிவுகள் அதிர்ச்சியளிக்கின்றன

கடந்த நாள்களில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன், பி.சி.ஆர் முடிவுகள் அதிர்ச்சியளிக்கின்றன எனத் தெரிவித்த புதுக்குடியிருப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம்.கெங்காதீஸ்வரன், ஆபத்தான கட்டத்தை நோக்கி புதுக்குடியிருப்பு செல்வதாகவும் கூறினார்.

அத்துடன், ஒரு சிலரது அசமந்தப்போக்கால் புதுக்குடியிருப்பு பிரதேசமே முற்றாக பாதிப்படையும் நிலைமை ஏற்படலாமெனவும் நிலைமை கட்டுக்குள் அடங்காமல் போகுமானால், எவராலும் வைத்தியர்களால் காப்பாற்ற முடியாமல் போய்விடும் எனவும், அவர் எச்சரித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், புதுக்குடியிருப்பில், தொடர்ச்சியாக கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருவதாகவும் இது கடந்த பத்து நாள்களுக்கும் மேலாக பலரின் உடல் நிலை தொடர்பில் வெளியான பெறுபேறாகாவே பார்க்க வேண்டியுள்ளதெனவும் கூறினார்.

இன்றும் பலர் அறிகுறிகளுடன் வீடுகளுக்குள் இருப்பதாகத் தெரிவித்த அவர், இவர்கன் அனைவரும் வைத்தியசாலையில் நாட வேண்டும் என்றும், அவர் தெரிவித்தார்.

வடமாகாணத்தில், அதிகளவாக கொரோனா தொற்றும் பிரதேசமாக புதுக்குடியிருப்பு பிரதேசம் மீண்டும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், கடந்த புதன்கிழமை (25) 100 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில். 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்த நிலைமை தொடருமானால், குறுகிய காலத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசம் கொரோனா தொற்றால் மோசமான நிலைமை எதிர்கொள்ள நேரிடலாம் எனவும், அவர் எச்சரிக்கை விடுத்தார்.

ஆகவே, தொடர்ந்து வரும் நாள்களில் குறைந்தது இரண்டு வாரங்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது அவசியம் என்றும், எம்.கெங்காதீஸ்வரன் கேட்டுக்கொண்டார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  நால்வரை வைத்தியசாலைக்கு அனுப்பிய குடை!
Previous articleதுறைமுகத்தில் சிக்கிய 5,000 டொன் சீனி!
Next articleநாளை முதல் சீனி விலை குறைகிறது.