Home Local news இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் நாடு மீண்டும் திறக்கப்படும் வாய்ப்பு!

இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் நாடு மீண்டும் திறக்கப்படும் வாய்ப்பு!

இறுக்கமான சுகாதார வழிகாட்டல்களுடன் நாட்டை மீண்டும் திறக்க வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் வலியுறுத்தியுள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தக் கோரிக்கையை பதிவு செய்துள்ளார். தொடர் முடக்க நிலையை நாடு தாங்கிக் கொள்ளாது. நாட்டின் சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டோருக்கு தற்போதைய முடக்கல் நிலைமையை எதிர்கொள்ள முடியாது.

சிறிய மற்றும் நடுத்தர பொருளாதாரத்தைக் கொண்ட சுமார் 45 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களால் தொடர்ந்தும் இதனை தாங்கிக்கொள்ள முடியாது.

இறுக்கமான சுகாதார வழிகாட்டல்களை நடைமுறைப்படுத்துவதுடன் தொழில், வியாபாரம் மற்றும் ஏனைய நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்கும் வகையில் நாடு திறக்கப்பட வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  பேயோட்டுவதாக கூறி மாமியையும், மருமகளையும் துஷ்பிரயோகம் செய்த பூசாரி
Previous articleகொவிட் தடுப்பூசி செலுத்திய வைத்தியருக்கு நேர்ந்த பரிதாபம்!
Next articleதரமற்ற எரிவாயு சிலிண்டர்கள் விற்பனையில்; வெடிக்கும் அபாயம்!