Home Local news கோவிட் சடலங்களை பொதி செய்யும் 15,000 உறை பைகளை இறக்குமதி செய்ய முடிவு!

கோவிட் சடலங்களை பொதி செய்யும் 15,000 உறை பைகளை இறக்குமதி செய்ய முடிவு!

நாட்டிற்கு மேலும் 15,000 சடலம் பொதி செய்யும் உறை பைகளை இறக்குமதி செய்ய சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன் முதல் கட்டமாக சீனாவில் இருந்து 5000 சடலம் பொதி செய்யும் உறை பைகளை கொள்வனவு செய்ய விலைமனு கோரப்பட்டு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சடலம் பொதி செய்யும் உறை பைகள் தரம் குறைந்தவை என்று பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் புதிய தரமான சடலம் பொதி செய்யும் உறை பைகளை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஏற்கனவே தரம் குறைந்த உறை பைகளை இறக்குமதி செய்த நிறுவனத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தரம் குறைந்த கோவிட் பாதுகாப்பு அங்கிகள் இறக்குமதி செய்யப்படுவதாக குற்றப்புலனாய்வு பிரிவினரின் விசாரணைகளிலும் தெரியவந்துள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  யாழ்.சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளி சூரியகாந்தி ஜெயச்சந்திரன் குடும்பத்துடன் இணைந்தார்
Previous articleகொவிட் தொற்றுக்குள்ளான 212பேர் உயிரிழப்பு; இதுவரை 8583.
Next articleசிறுவர்களுக்கு கொரோனா தொற்றைக் கண்டறிவது எப்படி?