Home Local news பிரபல சட்டத்தரணி கொரோனாவுக்கு பலி

பிரபல சட்டத்தரணி கொரோனாவுக்கு பலி

திருகோணமலையில் உள்ள சட்டத்தரணிகளின் மத்தியில், தமிழ் தேசிய உணர்வும், ஆளுமையும், கடவுள் பக்தியும் நிறைந்த சட்டத்தரணிகளில் ஒருவராகவும் திகழ்ந்த திரு.கலியுகவரதன் பாலமுருகா கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு வைத்தியயசாலையில் கொரோனா என்ற வைரஸ்னால் பீடிக்கப்பட்டு சிகிற்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலை அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் அவரது இறுதிக்கிரிகைகள் பொலநறுவையில் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரின் மறைவு திருகோணமலை மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதேவேளை அன்னாரது மனைவி திருமதி.சந்திரவதனி ஒரு வைத்தியர் என்பதுடன் சென்ற வருடம் அவர் கிழக்கு மாகாண சுகாதார பணிமனையில் கொரோனா தொடர்பான தகவல் வழங்கும் பிரிவில் கடமையாற்றினார்.

அதன்பின்னர் இவ் வருடம் இடமாற்றலாகி தற்பொழுது அவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  வாகன விபத்து; மரத்தின் கிளை குத்தியதால் சாரதி ஸ்தலத்தில் பலி
Previous articleபூநகரி சங்குப்பிட்டி கடலில் கை, கால் கட்டப்பட்ட நிலையிருந்த சடலம் மீட்பு!
Next articleபெண்களுக்கு இப்படி ஒரு நிலையா? பெண்களே உஷார்!