Home Local news பூநகரி சங்குப்பிட்டி கடலில் கை, கால் கட்டப்பட்ட நிலையிருந்த சடலம் மீட்பு!

பூநகரி சங்குப்பிட்டி கடலில் கை, கால் கட்டப்பட்ட நிலையிருந்த சடலம் மீட்பு!

கிளிநொச்சி – பூநகரி, சங்குப்பிட்டி பாலத்திற்கருகில் கடலில் இருந்து அடையாளம் தெரியாத சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் பதில் நீதவான் சதீஸ்குமார் விஜயராணி முன்னிலையில் குறித்த சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

கை மற்றும் கால்கள் நைலோன் கயிற்றினால் கட்டப்பட்டு வலையினால் சுற்றப்பட்ட நிலையில் உருக்குலைந்த குறித்த சடலம் நேற்றைய தினம் இனம்காணப்பட்டிருந்தது.

இந்த நிலையில்  இன்று காலை 11.30 மணியளவில் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் பதில் நீதவான் சதீஸ்குமார் விஜயராணி முன்னிலையில் பூநகரி பொலிஸாரினால் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலம் காணப்படுவதனால் கொலையாக இருக்கும் எனத் தெரிவிக்கும் பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Gallery Gallery Gallery Gallery

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  கிண்ணியா உப்பாறு கடற்கரையில் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் சடலமாக மீட்பு
Previous articleசாவகச்சேரியில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா
Next articleபிரபல சட்டத்தரணி கொரோனாவுக்கு பலி