Home Local news கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் 29,403 அபாயகரமான வெடிபொருட்கள்

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் 29,403 அபாயகரமான வெடிபொருட்கள்

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுமாவட்டங்களில் 17,10,146 சதுரமீற்றர் பரப்பளவில் 29,403 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் தெரிவித்தார்.

இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப் மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது வெடிபொருட்களை அகற்றும் செயல்பாடுகளை முன்னெடுத்துள்ளது.

2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2021 ஓகஸ்ட் மாதம்; 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலை மற்றும் ஆனையிறவிலும் 17,10,146 சதுரமீற்றர் பரப்பளவில் இருந்து 29,403 அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து இந்நிறுவனம் கண்ணிவெடியகற்றும் பணிகளை முகமாலை பகுதியில் துரித கதியில் முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  10000 மண் மூடைகளை தோளில் சுமந்து அணைக்கட்டு கட்டும் விவசாயிகள்
Previous articleஇலங்கையின் ஒன்பது மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
Next articleஇதுவரையில் 16 சிறுவர்கள் கொரோனாவுக்கு பலி