Home Local news இலங்கையின் ஒன்பது மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

இலங்கையின் ஒன்பது மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

இலங்கையின் வானிலையில், தென்மேற்கு பகுதியில் நிலவும் மழை அடுத்த சில நாட்களுக்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய தினத்திற்கான காலநிலை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் வளிமண்டலவியல் திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

அத்துடன், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும்.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் மழை பெய்யும்.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை இலங்கையின் ஒன்பது மாவட்டங்களுக்கு பலத்த மழைவீழ்ச்சி குறித்து சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவு, வடக்கு, வட – மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Gallery Gallery

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  3 வாரங்களுக்காவது நாடு முடக்கப்பட வேண்டும்; விசேட வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்க.
Previous articleஅடுத்த இரண்டு வாரங்களில் சீனியின் விலை குறைக்கப்படும்! – அரசாங்கம் அறிவிப்பு
Next articleகிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் 29,403 அபாயகரமான வெடிபொருட்கள்