Home Local news விபத்தில் ஒருவர் பலி!

விபத்தில் ஒருவர் பலி!

விபத்தில் ஒருவர் பலி

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூர் நாவலடிச் சந்தியில் மோட்டார் சைக்கிளும் – பட்டா ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து நேற்று (27) மாலை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் மூதூர்-சம்பூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான சிவராசா நவநீதன் வயது (28) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபரின் சடலம் தற்போது சம்பூர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பட்டா வாகனத்தைச் செலுத்திச் சென்ற நபரை சம்பூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை மூதூர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  மன்னாரில் மேலும் ஒருவர் கொரோனாவுக்கு பலி - இதுவரை 11 பேர் உயிரிழப்பு.
Previous articleஆற்றை கடக்க முற்பட்ட விவசாயி ஆற்றில் விழுந்து உயிரிழப்பு!
Next articleஅடுத்த இரண்டு வாரங்களில் சீனியின் விலை குறைக்கப்படும்! – அரசாங்கம் அறிவிப்பு