Home jaffna news யாழில் அசுர வேகம் எடுக்கும் கோவிட்! மரணங்களும் தொற்றாளர்களும் அதிகரிப்பு

யாழில் அசுர வேகம் எடுக்கும் கோவிட்! மரணங்களும் தொற்றாளர்களும் அதிகரிப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகளில் 414 பேருக்குக் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குடாநாட்டின் பல பகுதிகளில் இன்று மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனைகளின்போது 364 பேர் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, பி.சி.ஆர். பரிசோதனைகளின்போது 50 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் அதிகபட்சமாக சாவகச்சேரியில் 124 பேரும், கரவெட்டியில் 102 பேரும் அடங்குகின்றனர்.

அதேவேளை, பருத்தித்துறையில் 56 பேர் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர். இதேவேளை, குடாநாட்டில் இன்று 4 பேர் கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  மரண எண்ணிக்கையை வரையறுப்பதே எங்களது பிரதான இலக்கு - சவேந்திர சில்வா
Previous articleகண்ணை மறைத்த காதல்: நடு வீதியில் கதறி அழுத பெற்றோர்!
Next articleஇலங்கை வரலாற்றில் ஒரே நாளில் பதிவாகிய அதிக்கூடிய கோவிட் மரணங்கள்!