Home Local news பதுளை பொது வைத்தியசாலையில் வைத்தியர்கள் உள்ளடங்கலாக 120 பேருக்குக் கொரோனா

பதுளை பொது வைத்தியசாலையில் வைத்தியர்கள் உள்ளடங்கலாக 120 பேருக்குக் கொரோனா

பதுளை பொது வைத்தியசாலையில் வைத்தியர்கள் உள்ளடங்கலாக நிர்வாகப் பிரிவில் 120 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை பிரிவுக்குப் பொறுப்பான வைத்தியர் பாலித ராஜபக்ஷ ஊடகங்களிடம் தெரிவித்தார்.

பதுளை பொது வைத்தியசாலையின் விசேட வைத்தியர்கள் மூவர் உள்ளிட்ட 11 வைத்தியர்கள், தாதியர்கள் 13 பேர், குடும்ப சுகாதார சேவை அதிகாரிகள் 08 பேர், ஏனைய அதிகாரிகள் 11 பேர், சிற்றூழியர்களில் சாரதி, பாதுகாவலர்கள் உள்ளிட்டவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோன்று வைத்தியசாலையில் ஐந்து கொரோனா சிகிச்சை விடுதிப் பிரிவுகளில் 150 தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொற்றாளர்களில் 40 இற்கும் மேற்பட்டவர்களுக்கு ஒட்சிசனின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  மட்டக்களப்பு - கல்முனை நெடுஞ்சாலைப் பகுதியில் பாவித்த மருத்துவ ஊசிகள், கழிவுகள் கொட்டப்படுவதாக மக்கள் கவலை
Previous articleகொரோனாவுக்கு பலியான 27 பொலிஸார்: இம்மாதத்தில் மட்டும் 10 பேர் உயிரிழப்பு!
Next articleபாரிஸில் தமிழர்கள் வாழும் பகுதியில் நடந்த கொடூரம் – மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!