Home Indian news தினமும் இளம்பெண்ணைத் தேடி வந்த பீட்சா: பின்னணியில் காத்திருந்த அதிர்ச்சி!

தினமும் இளம்பெண்ணைத் தேடி வந்த பீட்சா: பின்னணியில் காத்திருந்த அதிர்ச்சி!

பெங்களூரை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு நபர் ஒருவர் தினமும் பீட்சா ஆர்டர் செய்து அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவர் எலகங்கா நியூ டவுன் பொலிசாரிடம் புகார் ஒன்றினை அளித்துள்ளார். அந்த புகாரில், சில நாட்களுக்கு முன்னர் முகநூலில் நபர் ஒருவர் தன்னை திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்ததாகவும், தான் அதை மறுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் சில நாட்கள் கழித்து தனது வீடு, அலுவலகம், தான் செல்லும் இடம் என அனைத்திற்கும் தன்னை தேடி பீட்சா டெலிவரி செய்யப்படுவதாகவும் கூறியுள்ளார்.

தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறிய அந்த இளைஞர் தனக்கு போன் செய்து, நான்தான் உனக்கு பீட்சா ஆர்டர் செய்வதாகவும், தன்னை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கவில்லை என்றால் இப்படி தினமும் பீட்சா ஆர்டர் செய்து உன்னை தொல்லைசெய்வேன் என கூறுவதாகவும் அந்த பெண் தனது புகாரில் கூறியுள்ளார்.

மேலும், அந்த நபர் தனியார் நிறுவனம் ஒன்றின்மூலம் சில ஆட்களை நியமித்து தன்னை கவனித்துவருவதாக கூறியதாகவும் அந்த பெண் கூறியுள்ளார்.

அந்த நபரின் இதுபோன்ற செயலால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அவரோ அல்லது அவரால் நியமிக்கப்பட்ட யாரோ தன்னை தாக்க கூடும், இதனால் நான் ஒவ்வொரு நிமிடமும் பயத்துடனே வாழ்ந்துவருகிறேன்.

எனவே, உடனே அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அந்த பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் அந்த நபரை தேடி வருகின்றனர்.

READ MORE >>>  நிர்வாண பூஜை நடத்தி பெண் பலமுறை வல்லுறவு: போலி சாமியார் உட்பட 2 பேர் கைது:

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

Previous articleபேத்தியுடன் விளையாட வந்த 7 வயது சிறுமி: தாத்தா செய்த காரியம்!
Next articleகணவனை பிரிந்து வந்த அக்காவுக்கு தம்பியால் நேர்ந்த கொடுமை!