Home Local news மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரே வாரத்தில் 36 பேர் மரணம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரே வாரத்தில் 36 பேர் மரணம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனாவால் 36 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா. மயூரன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் “ மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 193 பேர் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும், நாளுக்கு நாள் தொற்றுக்குள்ளாவோரும், தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

மேலும் தற்போது தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்றுவருவதாகவும் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கான முதலாவது தடுப்பூசி 92.41 வீதமானவை ஏற்றப்பட்டுள்ளதுடன் அதில் ஆக குறைந்தளவு தடுப்பூசி 78.84 வீதம் களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் வீடுவீடாகச் இராணுவத்தினரும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாகவும், எனவே ஊடரங்கு அமுலில் உள்ள நிலையில் கூட தேவையின்றி சிலர் வீதிகளில் நடமாடிவருகின்றனர். இத் தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொதுமக்களாகிய உங்களால் தான் முடியும் ஆகவே வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றார்

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  வவுனியாவில் மேலும் 101 பேருக்கு கோவிட் தொற்று உறுதி!
Previous articleமுடக்கல் நிலை நீக்கப்பட்டால் கொரோனா உயிரிழப்புகள் 16,700 ஆக அதிகரிக்கும் அபாயம்
Next articleமனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வன்புணர்வு கொடுத்த சிறுவன்