Home Local news இலங்கையில் ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டவர்கள் கோவிட் தொற்றுக்கு பலி!

இலங்கையில் ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டவர்கள் கோவிட் தொற்றுக்கு பலி!

இலங்கையில் நாள் ஒன்றின் அதி கூடிய கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளது. இதன்படி, நேற்றைய தினம் (25) கோவிட் தொற்றினால் 209 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,157 ஆக அதிகரித்துள்ளது. நாளொன்றில் முதல் தடவையாக 200தை தாண்டிய கோவிட் மரணங்கள் நேற்று பதிவாகியுள்ளன.

இதேவேளை, கொவிட் தொற்றினால் இன்றைய தினம் 4,597 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இலங்கையில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 412,370 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொவிட் தொற்றினால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 53,353ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  வடக்கு மாகாணத்தில் மேலும் 80 பேருக்கு கொரோனா
Previous articleவவுனியாவின் புதிய அரச அதிபராக பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர் நியமனம்
Next articleகொவிட் தொற்றாளர்களின் உயிரை காப்பாற்றும் அபூர்வ மருந்தை இழந்த இலங்கை