Home Local news வவுனியாவின் புதிய அரச அதிபராக பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர் நியமனம்

வவுனியாவின் புதிய அரச அதிபராக பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர் நியமனம்

வவுனியா மாவட்ட புதிய அரச அதிபராக பௌத்தசாசன அமைச்சில் உயர் அதிகாரியாக பணியாற்றிய பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா அரச அதிபராக கடமையாற்றிய சமன்பந்துலசேன வடமாகாண பிரதம செயலாளராக பதவி உயர்வு பெற்று சென்றிருந்தார்.

இதனையடுத்து கடந்த ஒரு மாதகாலமாக மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய தி.திரேஸ்குமார் பதில் அரச அதிபராக தனது பொறுப்புக்களை மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில், பௌத்தசாசன அமைச்சில் முக்கிய பதவியினை வகித்த சரத்சந்திர வவுனியா மாவட்டத்திற்கான புதிய அரச அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், நாளைய தினம் தனது பதவியினை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  195 கொரோனா மரணங்கள்
Previous articleஉயிரிழந்த பிறகும் இருவரை வாழ வைத்த யாழ். இளைஞன்!
Next articleஇலங்கையில் ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டவர்கள் கோவிட் தொற்றுக்கு பலி!