Home jaffna news கொரோனா காலத்திலும் யாழில் இப்படியான செயல்பாடுகள்; இருவர் கைது

கொரோனா காலத்திலும் யாழில் இப்படியான செயல்பாடுகள்; இருவர் கைது

யாழில் கொரோனா காலத்திலும் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை மணற்காடு கரையோரப் பிரதேசத்தில் இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை நடத்திய சோதனை நடவடிக்கையில் 139 கிலோ 930 கிராம் உடைகொண்ட கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இவற்றை இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கடத்திவந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என கடற்படை தெரிவித்ததுடன் அவர்கள் பயன்படுத்திய இரண்டு மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும்  மீட்கப்பட்டுள்ள கேரள கஞ்சாவின் பெறுமதி 4 கோடியே 10 இலட்சம் ரூபா என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

Gallery Gallery

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  தவிசாளரின் மூக்கை துண்டாடிய பெண்!
Previous articleகம்பஹாவில் 55 கிராம சேவகர்களுக்கு கொரோனா! 81 பேர் தனிமைப்படுத்தலில்
Next article100 நாட்களில் பணம் இரட்‍டிப்பாகும் என நூதன ஆசை காட்டி ரூ.100 கோடி மெகா மோசடி!