Home Local news சீனிக்காகக் காத்திருக்கும் மக்கள்

சீனிக்காகக் காத்திருக்கும் மக்கள்

நாட்டில் அண்மைக்காலமாக பால்மா, எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்கள் சிலவற்றுக்குத் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இந்நிலையில் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி, வாழைச்சேனை உட்பட பல பகுதிகளில் சீனிக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகவும் மொத்த விற்பனை நிலையம் மற்றும் சில்லறைக் கடைகளில் பொது மக்கள் சீனியை பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் வாழைச்சேனை – மாவடிச்சேனையில் அமைந்துள்ள சதொச விற்பனை நிலையத்தில் நுகர்வோரின் நலன் கருதி ஒருவருக்கு ஒரு கிலோ எனும் நிபந்தனைக்கமைய சீனி விற்பனை செய்யப்படுகிறது.

சீனியைப் பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள் அங்கு நீண்ட வரிசையில் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  முன்னாள் போராளிகளிடம் இராணுவ தளபதி வேண்டுகோள்;
Previous articleமேலும் இருவாரத்திற்கு நீடியுங்கள்; ரணில் கோரிக்கை
Next articleதடுப்பூசி வழங்கிய மருத்துவருக்கு இடமாற்றம்.