Home Local news வவுனியா சதோசவில் சீனிக்கு தட்டுப்பாடு

வவுனியா சதோசவில் சீனிக்கு தட்டுப்பாடு

வவுனியா நகரில் அமைந்துள்ள சதோச விற்பனை நிலையத்தில் சீனிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையால் சீனியினை கொள்வனவு செய்யச் செல்பவர்கள் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சீனிக்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் வவுனியாவில் அமைந்துள்ள மொத்த வியாபார நிலையங்களில் ஒரு கிலோகிராம் சீனி 205 முதல் 215 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

அதனைக் கொள்வனவு செய்யும் உள்ளூர் வர்த்தகர்கள் 225 ரூபாய் முதல் 240 ரூபாய் வரையில் பொதுமக்களிற்கு விற்பனை செய்து வருகின்றனர்.

ஆயினும் சதோச விற்பனை நிலையத்தில் ஒரு கிலோகிராம் சீனியின் விலை 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதனால் அதிகளவான மக்கள் சீனியினை கொள்வனவு செய்வதற்காக அங்கு செல்லும் நிலையில் சீனி இல்லை என்று அங்கு தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதுடன், அதிகவிலைக்கு உள்ளூர் கடைகளில் சீனியினை கொள்வனவு செய்கின்றனர்.

எனவே சதோச விற்பனை நிலையமூடாக தட்டுப்பாடின்றி பொதுமக்களிற்குச் சீனியினை விற்பனை செய்வதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுப்பதுடன், மொத்த மற்றும் உள்ளூர் வியாபாரிகளும் நியாயமான விலையில் சீனியினை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  யாழில். 4 கோடி மதிப்பிலான கஞ்சா மீட்பு
Previous articleஇவ்வருடத்தில் திடீரென அதிகரித்த பணவீக்கம்
Next articleமாதுளையின் மருத்துவ குணங்கள்