Home Ampara news கொரோனாவால் 163 கர்ப்பிணிப் பெண்கள் பாதிப்பு!

கொரோனாவால் 163 கர்ப்பிணிப் பெண்கள் பாதிப்பு!

கல்முனைப்  பிராந்திய சுகாதார சேவைகள்  பிரிவில் இது வரை 163 கர்ப்பிணிப் பெண்கள் கொரோனாத்  தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி  ஜீ. சுகுணன் இன்று (26)  தெரிவித்தார்.

இவர்களில் தற்போது 39 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஏனையவர்கள் பூரண சுகமடைந்துள்ளதாகவும், கர்ப்பிணிப் பெண்களில் இது வரை எவ்விதமான இறப்புகளும் இப் பிராந்தியத்தில் பதிவு செய்யப்படவில்லையெனவும் தெரிவித்தார்.

இது வரையில் தொற்றாளர்களாக 6,178 பேர் இனங்காணப்பட்டுள்ளதோடு, 138 மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  யாழில் செபம் சொல்லிக் கொண்டிருந்தவர் மயங்கி விழுந்து மரணம்.
Previous articleஓய்வூதியம் வழங்கப்படும் தினம் அறிவிப்பு
Next articleவெடிபொருட்களுடன் இருவர் கைது