Home Local news நாட்டில் நாளாந்தம் 50 சத வீதமான பிளாஸ்டிக் கழிவுகள் முறையற்ற வகையில் சுற்றுச்சூழலில் கலக்கப்படுகின்றன!

நாட்டில் நாளாந்தம் 50 சத வீதமான பிளாஸ்டிக் கழிவுகள் முறையற்ற வகையில் சுற்றுச்சூழலில் கலக்கப்படுகின்றன!

பிளாஸ்டிக் கழிவுகளை முகாமைத்துவம் செய்வதற்காக சுற்றாடல் துறை அமைச்சு 2021 தொடக்கம் 2030 ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதிக்காக பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவ தேசிய செயற்றிட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

சுற்றாடற்துறை அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர அனில் ஜாசிங்கவினால் இந்த தேசிய செயற்றிட்டம் தயாரிக்கப்பட்டு சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவத்துவ தேசிய செயற்றிட்டத்துக்காக ஜப்பான் அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் செயற்திட்டம், சுற்று சூழல் மற்றும் சூழல் தொழில்நுட்பத்துக்கான நிறுவனம் ஆகியன இதற்கான ஒத்துழைப்பை வழங்குகின்றன.

விசேடமாக ‘3 ஆர்’ செயற்றிட்ட கொள்கைக்கு அமைய பிளாஸ்டிக் பாவனையை குறைத்தல், பிளாஸ்டிகை மீள்சுழற்சி செய்தல், மற்றும் மீள்பாவனை ஆகிய முறைமைக்கு அமைய பிளாஸ்டிக் கழிவுகளை முகாமைத்துவம் செய்வது தேசிய செயற்றிட்டத்தில் இலக்காக காணப்படுகிறது.

ஒரு வருடத்துக்கு மாத்திரம் சுமார் 3 இலட்சம் மெற்றிக் தொன் பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. அத்துடன் நாட்டுக்குள் மாத்திரம் ஒரு நாளைக்கு 10,768 மெற்றிக் தொன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்படுகின்றன. அத்துடன் உள்ளுராட்சிமன்ற சபைகளினால் ஒரு நாளைக்கு மாத்திரம் சுமார் 3, 458 மெற்றிக் தொன் பிளாஸ்டிக் கழிவுகள் சேமிக்கப்படுகின்றன.

இதற்கமைய நாட்டில் நாளாந்தம் 50 சத வீதமான பிளாஸ்டிக் கழிவுகள் முறையற்ற வகையில் சுற்றுச் சூழலில் கலக்கப்படுகின்றன. இதனால் சுற்றுச் சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  புறா சண்டை!! கொரோனா தொற்றுடன் பெண்கள் ஆடிய பேயாட்டம்!!
Previous articleயாழ். வங்கி ஒன்றின் ஊழியர்கள் 12 பேருக்கு கொரோனா
Next articleஓய்வூதியம் வழங்கப்படும் தினம் அறிவிப்பு