Home Local news வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழப்பு

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழப்பு

வவுனியா வைத்தியசாலையில் கோவிட் தொற்றால் பெண் ஒருவர் மரணமடைந்துள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கோவிட் தொற்று காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கோவிட் சிகிச்சை விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

வவுனியா, தோணிக்கல், சேக்கிழார் வீதியைச் சேர்ந்த 71 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரது உடலைச் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளைச் சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  13 வயது சிறுமி கர்ப்பம்; 12 வயது தம்பி கைது - வவுனியாவில் சம்பவம்.
Previous articleஊரடங்கு நீடிக்கப்படுவது தொடர்பிலான அறிவிப்பை வெளியிட்டார் சுகாதார அமைச்சர்
Next articleசவப்பெட்டிகள் கையளிப்பு