Home Local news சூழலுக்குப் பாதிப்பில்லாத முகக் கவசத்துக்கு முன்னுரிமை

சூழலுக்குப் பாதிப்பில்லாத முகக் கவசத்துக்கு முன்னுரிமை

சுற்றாடலுக்குப் பாதிப்பில்லாத முகக் கவசங்களுக்கு எதிர்வரும் காலங்களில் முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது. இதற்காக, பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் குழுவொன்று, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத முகக் கவச உற்பத்திப் பணிகளை  மேற்கொண்டு, அவற்றை தற்போது நிறைவுசெய்துள்ளது.

ஒரு நாளைக்கு மாத்திரம் பயன்படுத்த பரிந்துரைக்கப்படும் செயற்கை மூலப்பொருள்களில் இருந்து தயாரிக்கப்படும் வழமையான முகக் கவசங்களை நாளாந்தம் அகற்றுவதால், சுற்றாடலுக்குப் ஏற்படும் பாதிப்பைத் தடுப்பதற்கான மாற்றுவழியாக இந்தப் புதிய முகக் கவசம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இயற்கை பருத்தித் துணியைப் பயன்படுத்தி, குறித்த முகக்கவசம் தயாரிக்கப்பட்டுள்ளது.
பயன்படுத்திய முகக் கவசம் சுற்றாடலுக்கு விடுவிக்கப்பட்ட பின்னர், இந்த முகக்
கவசம் உக்கும் தன்மையுடையது என்பது விசேட அம்சமாகும். இந்த முகக்கவசம் மூன்று அடுக்குகளைக் கொண்டதாகும் என குறித்த முகக்கவசத்தை உற்பத்தி செய்த பேராசிரியர் குழுவின் பிரதானியான பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இராசாயனவியல் துறை பேராசிரியர் காமினி ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழலுக்கு இசைவான இந்த முகக் கவசத்தை சர்வதேச ரீதியில் பயன்படுத்துவதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்காக, சம்பந்தப்பட்ட சர்வதேச நிறுவனங்களுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  யாழ் குருநகரில் தனிமைப்படுத்தப்பட்ட 16 பேர்
Previous articleஅரிசியின் விலையை அதிகரிக்க முடியாது?
Next articleநாட்டின் காலநிலையில் திடீர் மாற்றம்