Home Local news அரிசியின் விலையை அதிகரிக்க முடியாது?

அரிசியின் விலையை அதிகரிக்க முடியாது?

அரிசியின் விற்பனை விலையை அதிகரிக்குமாறு அரிசி ஆலை உரிமையாளர்கள் தொடர்ந்து வலியுறுத்துவதாகத் தெரிவித்த வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன, கொவிட் தாக்கத்தால் நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறான நிலையில் அரிசியின் விலையேற்றத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்
கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், நிர்ணய விலைக்கு மாறாக அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்வதற்கு 6 களஞ்சியசாலைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 40 இலட்சம் மெற்றிக் தொன் நெல் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுப்படுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருள்களின் விலை கொவிட்-19 வைரஸ் தாக்கத்தால் அதிகரித்துள்ளது. இருப்பினும், சதொச விற்பனை நிலையத்தின் ஊடாக அத்தியாவசிய பொருள்கள் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அரிசியின் விற்பனை விலை சர்ச்சைக்குரியதாகக் காணப்படுகிறது.

அரிசியின் நிர்ணய விலையை பேணுவதற்குத் தேவையான அனைத்து ஆரம்பக்கட்ட
நடவடிக்கைளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.நெல்லின் விற்பனை விலை
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளிடமுள்ள நெல்லை இடைத் தரகர்கள் இல்லாமல்
விவசாயத் திணைக்களம் பெற்றுக் கொள்தற்கான நடவடிக்கைகள் செயற்படுத்தப்பட்டுள்ளன
என்றார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  ஊரடங்கை நீடிக்க ஏற்பாடு?
Previous articleமுல்லைத்தீவில் ஒரே நாளில் நால்வர் கோவிட் தொற்றால் உயிரிழப்பு!
Next articleசூழலுக்குப் பாதிப்பில்லாத முகக் கவசத்துக்கு முன்னுரிமை