Home Local news முல்லைத்தீவில் ஒரே நாளில் நால்வர் கோவிட் தொற்றால் உயிரிழப்பு!

முல்லைத்தீவில் ஒரே நாளில் நால்வர் கோவிட் தொற்றால் உயிரிழப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரே நாளில் நால்வர் கோவிட் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கோவிட் தொற்றுக்குள்ளான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நால்வரே நேற்று இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

முள்ளியவளையின் கணுக்கேணி கிழக்கு, தண்ணீரூற்று, கிச்சியாபுரம் மற்றும் ஒட்டுசுட்டானின் பெரிய சாளம்பன் ஆகிய கிராமங்களை சேர்ந்த 70, 47, 68 வயதுகளையுடைய ஆண்கள் மூவரும், 42 வயதுடைய பெண் ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.

இதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் கோவிட் தொற்றால் இதுவரையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைய நாட்களாக கோவிட் மரணங்கள் சடுதியாக அதிகரித்து வருகின்ற நிலையில் மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  காதல் ஜோடியால் யாழில் கலவரம்.
Previous articleஈழத்தமிழர்களின் பிரச்சினைகளுக்கு ஆதரவுக்கோரி தீவிர முயற்சியில் களமிறங்கியுள்ள சமதா கட்சி
Next articleஅரிசியின் விலையை அதிகரிக்க முடியாது?