Home Indian news ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளுக்கு ஆதரவுக்கோரி தீவிர முயற்சியில் களமிறங்கியுள்ள சமதா கட்சி

ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளுக்கு ஆதரவுக்கோரி தீவிர முயற்சியில் களமிறங்கியுள்ள சமதா கட்சி

ஈழத் தமிழர்களின் இன்னல்களை அரசியல் ஆக்காமல், பொதுநல நோக்கோடு முன்னெடுக்க சமதா கட்சி முடிவெடுத்துள்ளதாக சமதா கட்சியின் அகில இந்திய முதன்மை பொதுச்செயலாளர் கோன் தெரிவித்துள்ளார்.

சமதா கட்சியின் நிறுவனரும், இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியுமான ‘ஜார்ஜ் பெர்னாண்டஸ்’ அவர்களின் கனவாகிய ‘தமிழ் ஈழம்’ அடைந்தே தீரவேண்டும் என்ற குறிக்கோளுடன் சமதா கட்சி பணியாற்றிக் கொண்டிருப்பதாகவும், ஈழம் என்றொரு நாடு வேண்டுமென்பதில் சமதா கட்சி உறுதியாக உள்ளதாகவும், அந்தக் கட்சி கூறியுள்ளது.

ஈழத் தமிழருக்கு ஆதரவு கோரி இதுவரை இந்திய ஒன்றியத்தின் அனைத்து தலைவர்களையும் சந்தித்துள்ளதாகவும், தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை சந்திப்பதற்கு அனுமதி கோரியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும்,தனித் தமிழீழம் அமைக்க ஈழத் தமிழருக்கு உதவும் தமது முயற்சிக்கு அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பேனர்ஜி, உதவ் தாக்கரே போன்ற தலைவர்கள் ஆதரவு தெரிவித்திருக்கின்றார்கள் என்றும் சமதா கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஏ. கோன் தெரிவித்தார்.

Gallery Gallery

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  ‘வீட்டில் ஒரேயொரு அறைதான்’ 11 நாட்களாக மரத்தில் தனிமைப்பட்டிருந்த மாணவன்!
Previous articleஉண்மையான கர்ண பிரபு இவர்தான்.
Next articleமுல்லைத்தீவில் ஒரே நாளில் நால்வர் கோவிட் தொற்றால் உயிரிழப்பு!