Home Local news மட்டக்களப்பில் சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டவருக்கு அபராதம்

மட்டக்களப்பில் சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டவருக்கு அபராதம்

மட்டக்களப்பு  – முகத்துவாரப் பகுதியில் ஊரடங்கு வேளையில் சட்டவிரோதமாகப் பெருமளவிலான அரச மதுபான விற்பனையில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு தண்டப்பணமாக 65 ஆயிரம் ரூபா செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.எம் றிஸ்வான் முன்னிலையில் இன்று (25) குறித்த நபரை ஆஜர்படுத்தியபோது நீதவான் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றுக்கமைய மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய மது ஒழிப்பு பிரிவு பொலிஸ்சாஜன் ரி. கிருபாகரன் தலைமையிலான பொலிஸார் சம்பவதினமான நேற்று முகத்துவாரம் பகுதியிலுள்ள குறித்த வீட்டை பொலிஸார் முற்றுகையிட்டனர்.

இதன்போது நீண்டகாலமாகச் சட்டவிரோதமாக அரச மதுபானங்களை வியாபாரம் செய்து வந்த ஒருவரை  பெருமளவிலான மதுபானப் போத்தல்களுடன் கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.எம் றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்திய  போது அவரை தண்டப்பணமாக 65 ஆயிரம் ரூபா செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Gallery

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  அனைத்து அரச ஊழியர்களும் கடமைக்கு செல்ல தேவையில்லை; அறிவிப்பை தளர்த்தியது அரசாங்கம்.
Previous articleமுல்லையில் இன்று 15 கொரோனா மரணங்கள் பதிவு!
Next articleபானிபூரியில் சிறுநீரை கலந்த வியாபாரி கைது;