Home Local news படிக்க வந்த சிறுவனுக்கு பாலியல் தொல்லை; பிக்கு கைது!

படிக்க வந்த சிறுவனுக்கு பாலியல் தொல்லை; பிக்கு கைது!

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள புன்னைக்குடா விகாரையில் தங்கியிருந்து கல்வி கற்றுவந்த 11 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் விகாரையின் பிரதம பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பிக்கு இன்றைய தினம் கைது செய்யப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேறொரு மாவட்டத்தை சேர்ந்த 11 வயதுடைய குறித்த சிறுவன் பிக்குவாக படிப்பதற்பாக விகாரையில் வந்து தங்கியிருந்துள்ளார்.

இந்த நிலையில் நீண்டகாலமாக குறித்த பிரதம பிக்கு அந்த சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் இன்றைய தினம் பாதிக்கப்பட்ட சிறுவன் பொலிஸாரிடம் சென்று முறைப்பாடு செய்துள்ளதாக தெரியவருகிறது.

இதனையடுத்து குறித்த பிக்கு கைது செய்யப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட சிறுவனை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கைது செய்யப்பட்ட பிக்குவை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  3,435 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகினர்!
Previous articleகைதிகள் தொடர்பாக ஜனாதிபதி எடுத்துள்ள முக்கிய நடவடிக்கை!
Next articleமரணத்தின் விளிம்பிற்கு சென்று மீண்டு வந்த பெண்ணின் தகவல்!