Home Local news கையடக்க தொலைபேசிக்காக தற்கொலை செய்த பாடசாலை மாணவன்

கையடக்க தொலைபேசிக்காக தற்கொலை செய்த பாடசாலை மாணவன்

மாத்தறையில் பாடசாலை மாணவன் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

ரொட்டும்ப, பல்லேகந்த பிரதேசத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

கல்வி நடவடிக்கைக்காக வழங்கப்பட்ட கையடக்க தொலைபேசியை பெற்றோர் மீள பெற்றமையினால் இவ்வாறு குறித்த மாணவன் தற்கொலை செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியந்துள்ளது.

மாணவன் கல்வி நடவடிக்கைக்காக வழங்கப்பட்ட கையடக்க தொலைபேசியை தவறாக பயன்படுத்தியமையினால் பெற்றோர் அதனை மீளப் பெற்றுள்ளனர். எனினும் தன்னிடம் இருந்து கையடக்க தொலைபேசியை பெற்றோர் மீள எடுத்துக் கொண்டமையினால் மனவிரக்தியில் மாணவன் தற்கொலை செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்துள்ளார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  யாழ்ப்பாணத்தில் மேலும் 129 பேருக்கு கொரோனா தொற்று
Previous articleகொரோனா மரணங்கள் அதிகரித்து வருவதனால் காட்போட்டில் தயாராகும் பிரதேப்பெட்டிகள்;
Next articleமீண்டும் புதிய மாற்றம் – நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளதாக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் அறிவிப்பு