Home Local news அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

எதிர்காலத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் மிகவும் பலவீனமாக உள்ளது. கோவிட் தொற்றுநோயை எதிர்கொண்டு அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்ச்சியாக வழங்கப்படுகின்றது.

எனினும், சம்பளத்தை தொடர்ந்து வழங்குவதற்கு வலுவான பொருளாதாரத்தை நாடு கொண்டிருக்கவில்லை என்பதை அமைச்சர் வெளிப்படுத்தியுள்ளார்.

அரச வருமானத்தில் 80 வீதம் அரச ஊழியர்களின் சம்பளத்திற்காக செலவிடப்படுகின்றது. அதுபோல, எதிர்காலத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள குறைப்புக்கான சாத்தியக் கூறுகள் உள்ளன.

தனியார் ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  16 வயதான பாடசாலை சிறுமி!! அதிபர் மாட்டினார்
Previous articleகொரோனா இறப்பு பட்டியலில் இலங்கைக்கு 13ஆவது இடம்
Next articleவீட்டுக்குள் மர்மமான முறையில் இறந்த இருவருக்கு கொரோனா!