Home Local news ஜனாதிபதியின் முக்கிய முடிவுகளின் பின்னனியில் மந்திரவாதியா?

ஜனாதிபதியின் முக்கிய முடிவுகளின் பின்னனியில் மந்திரவாதியா?

இலங்கையில் கொவிட் வைரஸ தொற்று தீவிரமைடைந்தடைந்த போதிலும் ஜோதிடரின் ஆலோசனைக்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை முடக்காமல் இருந்தார் என பிரபல ஊடகமான கொழும்பு டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2019 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்து அனுராதாபுரத்தில் உள்ள பிரபல ஜோதிடரான ஞானக்க என்பவர், அவரது நம்பிக்கைக்குரியவராகியுள்ளார்.

தீய சக்திகளை விரட்டுவதற்கான ஆலோசனை பெறுவதற்கும் பூஜைகளுக்காகவும், ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் ஜனாதிபதி அனுராதபுரத்திற்கு பயணம் மேற்கொள்கிறார் என நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்ததாக குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஜோதிடரின் ஆலோசனைக்கு அமையவே ஜனாதிபதி முக்கிய தீர்மானங்கள் அனைத்தையும் எடுப்பார் என தெரியவந்துள்ளது. அவ்வாறான ஆலோசனைக்கமைய ஜனாதிபதியால் எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகள் கடுமையாக பாதித்துள்ளன.

நாட்டிற்கு மஞ்சள் இறக்குமதி செய்வதனை தடை செய்யும் நடவடிக்கை உட்பட இந்த பெண் சோதிடரின் முடிவிற்கமைய எடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் அனைத்து மருத்துவ பிரிவினர்களின் ஆலோசனைகளையும் மீறி ஞானக்காவின் ஆலோசனைக்கமைய கண்டி பெரஹரவை நடந்தும் தீர்மானத்தை ஜனாதிபதி எடுத்தார் என கூறப்படுகின்றது.

பெரஹரவை பார்வையிட பார்வையாளர்களுக்கு அனுமதிக்கப்படவில்லை என்ற போதிலும் இந்த நிகழ்வில் 5000 கலைஞர்கள் மற்றும் துணை ஊழியர்கள் உள்ளனர். மேலும் நேரடி ஒளிபரப்பிற்காக ஊடகக் குழுக்களும் இணைந்துள்ளன. நாட்டை முடக்குவது தொடர்பில் அண்மையில் நடந்த பிரதான கலந்துரையாடலில் ஜனாதிபதி எடுத்த தீர்மானங்கள் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட அதிர்ச்சியடைந்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

“நாங்கள் இலகுவாக முடிவுகளை எடுக்கவில்லை, ”என்று ஜனாதிபதி கோட்டாபய இந்த சந்திப்பில் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. “இது மற்ற நாடுகளைப் போல் இல்லை, (கண்டி) பெரஹர இலங்கையின் ஜாதகத்தின்படி பொது மக்களின் பங்கேற்புடன் நடத்தப்பட வேண்டும்” என ஞான மேனியோ கூறுகிறார்.

READ MORE >>>  கள்ள காதலியை வெட்டி கொன்ற பொலிசார் தற்கொலை!?

பெரஹர இதுவரை சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. பெரஹர நடத்தப்படாவிட்டால், தீய சக்திகள் என்னை பாதிக்கும் என கூறப்படுகிறது, நாட்டின் தலைவராக, நான் பலியாகிவிடுவேன். பெரஹர காரணமாக, அனைத்து கொரோனா வைரஸ் மரணங்களும் காளி தேவியின் தியாகங்களாக கருதப்படும். நாட்டின் எதிர்கால நல்வாழ்வு மற்றும் செழிப்புக்காக அவர்கள் தங்களை தியாகம் செய்திருக்கின்றார்கள்” என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று பரவலின் போது நாட்டை முடக்க தாமதம் ஏற்பட்டதற்கு இதுவே உண்மையான காரணம் என்று பிரதமருக்கு நெருக்கமான தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பு டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

Previous article2000 ரூபா நிவாரணம் மதுப்பிரியர்களுக்கு வழங்கப்படாதா?
Next articleஅதிரடி அறிவிப்பு வெளியானது!