Home Local news 2000 ரூபா நிவாரணம் மதுப்பிரியர்களுக்கு வழங்கப்படாதா?

2000 ரூபா நிவாரணம் மதுப்பிரியர்களுக்கு வழங்கப்படாதா?

மதுபானம் கொள்வனவு செய்யும் இயலுமை உடையவர்களுக்கு கோவிட் நிவாரணம் வழங்கக் கூடாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் செந்தில் தொண்டமான் கோரியுள்ளார்.

நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில் வசதி குறைந்த மக்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபா பணக் கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எவ்வாறெனினும், மதுபானம் கொள்வனவு செய்பவர்கள் இந்த நிவாரணத் திட்டத்திற்கு தகுதியுடையவர்கள் அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மதுபானம் கொள்வனவு செய்வோரின் தேசிய அடையாள அட்டை இலக்கங்களை பதிவு செய்து கொண்டு அவ்வாறானவர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படக் கூடாது என செந்தில் தொண்டமான், கோவிட் தடுப்பு படையணியிடம் கோரியுள்ளார்.

நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில் அனைத்து பிரஜைகளும் பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

மதுபானம் கொள்வனவு செய்யக்கூடியவர்களுக்கு கொடுக்கும் பணத்தை உண்மையிலேயே தேவையுடையவர்களுக்கு வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  ஒரு இலக்கத் தகட்டில் இரு கார்கள்; சந்தேகத்தில் ஒருவர் கைது.
Previous articleஅரச, தனியார் நிறுவனங்களுக்கு அதிமுக்கிய அறிவுறுத்தல்!
Next articleஜனாதிபதியின் முக்கிய முடிவுகளின் பின்னனியில் மந்திரவாதியா?