Home Local news மதுபானம், கசிப்பு விற்பனை: மட்டக்களப்பு புதூரில் இருவர் கைது!

மதுபானம், கசிப்பு விற்பனை: மட்டக்களப்பு புதூரில் இருவர் கைது!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புதூர் பிரதேசத்தில் ஊரடங்குச் சட்ட நேரத்தில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஒருவரும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்த ஒருவருமாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டார தெரிவித்தார்.

இன்று (23) அதிகாலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவின் பணிப்புரையில் குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் புதூர் பகுதியில் நடத்திய திடீர் சுற்றிவளைப்பின் போதே இரு இடங்களில் சட்டவிரோதமான முறையில் மறைத்து வைத்து விற்பனை செய்யப்பட்டு வந்த மதுபானம் மற்றும் கசிப்பு என்பன கைப்பற்றப்பட்டன.

இதன்போது 5,000 மில்லி லீற்றர் கசிப்பு மற்றும் பெருமளவு போத்தலில் அடைக்கப்பட்ட மதுபான ரின்களில் அடைக்கப்பட்ட சாரயம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  யாழில் திருநெல்வேலி கிழக்கிலுள்ள வீடொன்றின் மீது வாள்வெட்டு கும்பல் அட்டகாசம்!
Previous articleகட்டுத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது!
Next articleவெளிநாட்டில் பணிபுரிந்த இலங்கை பெண்ணுக்கு சுமார் 54 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க உத்தரவு