Home CRIME NEWS கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி!

கணவனுக்கு பாலில் தூக்கமாத்திரை கொடுத்து, தனது காதலனுடன் சேர்ந்து மூச்சுத் திணறடிக்கச் செய்து அவரை படுகொலை செய்த குற்றச்சாட்டின் கீழ், எட்டு வயது நிரம்பிய ஒரு பிள்ளையின் தாயும், அவரது காதலனும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில், இம்மாதம் 30ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எனினும், அந்த இளம் தாய், தனது கணவன் கொரோனா தொற்றால் உயிரிழந்துவிட்டார் என நாடகம் ஆடியுள்ளார். இந்தச் சம்பவம், இரத்தினபுரி- கிரிவெல்தலாவ பிரதேசத்தில்
இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வழமைபோலவே ஆடைத்தொழிற்சாலைக்கு கடந்த 20ஆம் திகதியன்று வருகைதந்திருந்த அப்பெண் வேலை செய்துகொண்டிருந்த போதே, மனிதவள முகாமைத்துவ
திணைக்களத்துக்கு அழைப்பொன்றுவந்துள்ளது.

அது தொடர்பில், அப்பெண்ணுக்கு அறிவித்த திணைக்களம், வாகனமொன்றையும் ஏற்பாடு செய்து வீட்டுக்கு அனுப்பிவைத்துள்ளது. வீட்டுக்கு வந்து பார்த்தபோது, தனது கணவன் இறந்துகிடந்துள்ளார். எனினும், கத்திப்புலம்பி ஊராரை கூப்பிட்டுவிடாமல், தன்னுடைய கணவன் கொரோனாவால் மரணமடைந்துவிட்டார் என அக்கம் பக்கத்தினருக்கு கூறியுள்ளார். அதனால், சடலத்தைப் பார்ப்பதற்கு யாரும்
வரவில்லை.

இது தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சடலத்தை, பொலிஸார் இரத்தினபுரி வைத்தியசாலையில் ஒப்படைத்தனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரி​சோதனையில் கொரோனா தொற்றால் அவர் மரணிக்கவில்லை என்றும்
செயற்கையான மூச்சுத்திணறல் காரணமாக மரணம் சம்பவித்துள்ளது என்றும் கண்டறியப்பட்டது.

அதனையடுத்து, சந்தேகமடைந்த பொலிஸார், மனைவியிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். முதல்நாள் இரவு அதாவது 19ஆம் திகதியன்று படுக்கைக்குச்
செல்வதற்கு முன்னர், தன்னுடைய கணவனுக்கு ஒரு கிளாஸ் பால் கொடுத்த மனைவி, பாலுடன் ஆறு தூக்கமாத்திரைகளையும் கலந்துள்ளார். அதனைக் குடித்த
சிறிது நேரத்திலே​​யே கணவர் நன்றாக கண்ணயர்ந்துவிட்டார்.

READ MORE >>>  ஒரு இலக்கத் தகட்டில் இரு கார்கள்; சந்தேகத்தில் ஒருவர் கைது.

உடனடியாக தன்னுடைய காதலனுக்கு ​தொலைபேசி அழைப்பை எடுத்த அந்தப் பெண், வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்தவுடன், கணவன்
படுத்திருந்த அறைக்குச் சென்ற இவ்விருவரும், அந்நபரை மூச்சுத் திணறச் செய்து படுகொலை செய்துள்ளனர்.

கணவனின் கால்களை இறுக்கமாக காதலன் பிடித்துக்கொள்ள, மனைவி, தனது கணவனின் முகத்தில் தலையணையை வைத்து அமிழ்த்திப்பிடித்து மூச்சு திணறச்செய்துள்ளார். அவர் மரணமடைந்துவிட்டார் என தெரிந்துகொண்டதன் பின்னர், காதலன் வந்த வழியிலேயே அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

அவர், அந்தப் பெண் பணியாற்றும் ஆடைத்தொழிற்சாலையில்,  மேற்பார்வையாளராகப் பணியாற்றுகின்றார். தன்னுடைய கணவன் தொடர்ச்சியாக பாலியல் ரீதியில் கடுமையாக துன்புறுத்துவதாக, அந்த மேற்பார்வையாளரின் கவனத்துக்கு அப்பெண் கொண்டுவந்துள்ளார். அதுவே காதலாக
மலர்ந்துள்ளது.

எனினும், அந்தக் காதலுக்கு காதலியின் வீட்டார் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்துவந்துள்ளனர் என்பது விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது. அப்பெண்ணும் மேற்பார்வையாளரும் சேர்ந்து, இரத்தினபுரியில் உள்ள மருந்தகங்களில் ஒவ்வொரு தூக்கமாத்திரையாக ஆறு மாத்திரைகளைக் கொள்வனவு செய்துள்ளனர் என்பதும் விசாரணைகளின் ஊடாகக் கண்டறியப்பட்டுள்ளது.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரும் இரத்தினபுரி நீதவான் நீதிபதி ஜனிதா ரொசானி முன்னிலையில், நேற்று முன்தினம் (21) ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போதே, இருவரையும் இந்த மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

Previous articleவாகன ஓட்டியுடன் ‘பைக்’கை தூக்கிச் சென்ற பொலிஸார்!
Next articleமேலும் ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசி வந்தடைந்தது!