Home CRIME NEWS 2 கிலோ கஞ்சாவுடன் வியாபாரி கைது!

2 கிலோ கஞ்சாவுடன் வியாபாரி கைது!

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிவேம்பு பிரதேசத்தில், வியாபாரத்துக்காக 2 கிலோ 185 கிராம் கேரளா கஞ்சாவை எடுத்துச் சென்ற கஞ்சா வியாபாரி ஒருவரை  இராணுவ புலனாய்வு பிரிவினர், இன்று (22) இரவு கைது செய்து ஒப்படைத்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து, சம்பவதினமான இன்று இரவு 7 மணியளவில் மாவடிவேம்பு பகுதியில் இராணுவ புலனாய்வு பிரிவினர் பொலிஸாருடன் இணைந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது, மாவடிவேம்பு பகுதியைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி, பொதி செய்யப்பட்ட 2 கிலோ 185 கிராம் கேரள கஞ்சாவை வியாபாரத்துக்காக மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்ற போது அவரை இராணுவ புலனாய்வு பிரிவினர் வீதியில் வைத்து மடக்கி பிடித்து கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட கஞ்சா வியாபாரியையும் மீட்கப்பட்ட கேரளா கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் இராணுவ புலனாய்வு பிரிவினர் ஓப்படைத்துள்ளதாகவும்  சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  யாழில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5000, வெற்றிலை துப்பினால் 2000
Previous articleஇலங்கைக்கு விரைவில் மின்சாரத்தில் இயங்கும் பேரூந்துகள்!
Next articleயாழ். போதனா வைத்தியசாலைக்கு வந்த மிரட்டல் அழைப்பு; மர்ம நபர் சிக்கினார்.