Home jaffna news விலைமதிப்பற்ற கஜமுத்து விற்பனையில் ஈடுபட்ட 8பேர் கைது!

விலைமதிப்பற்ற கஜமுத்து விற்பனையில் ஈடுபட்ட 8பேர் கைது!

விலைமதிப்பற்ற மூன்று கஜமுத்துக்களை கம்பளை வியாபாரிக்கு விற்பனை செய்ய முயன்ற ஹட்டன் பிரதேச ஆலயம் ஒன்றின் பூசகர் உட்பட 8 பேரை கம்பளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை கம்பளை மாவட்ட நீதி மன்ற நீதான் ஸ்ரீநித் விஜேசேகரவின் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

சந்தேக நபர்கள் சம்பவதினமான வெள்ளிக்கிழமை (20) இரவு 9 மணியளவில் கம்பளை பிரதேச வியாபாரி ஒருவருக்கு மேற்படி கஜமுத்துக்களை விற்பனை செய்ய முயன்றமை தொடர்பாக புபுரஸ்ஸ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியான மனோரஞ்சித்துக்கு இரகசியத் தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

இதன்போது அவர் கண்டி எசல பெரஹரா பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தமையால் மேற்படி சம்பவம் குறித்து கம்பளை பிராந்தியத்துக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி ஸ்ரீயந்த பீரிஸ் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சாலியஹிங்கந்த ஆகியோருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து செயற்பட்ட பொலிஸார் சந்தேக நபர்கள் பயணித்த வேனை கம்பளை – நுவரெலியா பிரதான வீதியில் பொரலுமன்கட பிரதேசத்தில் வைத்து சோதனைக்கு உட்படுத்தியபோது குறித்த கஜமுத்துக்களை கைப்பற்றினர்.
லிந்துலை பிரதேசத்தைச் சேர்ந்த இருவரும் ஹட்டன் பகுதியைச் சேர்ந்த அறுவர் உட்பட 8 சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளிலிருந்து குறித்த கஜமுத்துக்கள் குருணாகல் பிரதேசத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் கடமையாற்றிவரும் யாழ்ப்பாண பகுதியைச் சேர்ந்த பூசகர் ஒருவரினால் ஹட்டன் பகுதி பூசகருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

READ MORE >>>  பிறந்து ஒரிரு நாட்களேயான சிசுவை நாய் தூக்கச்சென்ற துயரம்

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

Previous articleவைத்தியருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த ரிஷாட்!
Next articleசின்ன வெங்காயம் சாப்பிட்டு வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?