Home Local news முதன் முறையாக 4000ஐ கடந்தது கொவிட் தொற்றாளர் தொகை!

முதன் முறையாக 4000ஐ கடந்தது கொவிட் தொற்றாளர் தொகை!

நாட்டில் மேலும் 1,172 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 389,988 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றையதினம் 3,110 பேர் தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையிலேயே மேற்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்று 4,282 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 18,769  பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். அதன்படி, 342,159 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 40,733 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதேவேளை, மேலும் 183 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர். அதன் அடிப்படையில்,  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 7,366 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  யாழில் கொரோனா தொற்றாளர்களின் உயிரிழப்பு 100ஐ நெருங்கியது
Previous articleமட்டக்களப்பில் வித்தியாசமான வாழை மரம்
Next articleவைத்தியருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த ரிஷாட்!