Home Local news இலங்கையில் எரிபொருள் விலை குறையும் வாய்ப்பு?

இலங்கையில் எரிபொருள் விலை குறையும் வாய்ப்பு?

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை திடீரென சரிந்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில்நிலையில் இலங்கையில் எரிபொருள் விலையை குறைக்குமாறு நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் உரிமை பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே கடிதம் மூலம் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை 73.95 டொலராக இருந்து வந்த நிலையில், தற்போது 62.14 டொலராக சாரிந்துள்ளதென அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை நிதியமைச்சராக பசில் ராஜபக்ஷ பதவியேற்றதும் எரிபொருள் விலை குறைக்கப்படும் என பிரச்சாரம் செய்யப்பட்டது.

உலக சந்தையில் ஏற்பட்டுள்ள சாதகமான நிலையை நிதியமைச்சர் பயன்படுத்திக் கொள்வார் என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  மட்டக்களப்பில் ஆடி அமாவாசை வழிபாடுகளில் பெருந்திரளான மக்கள் குழுமியமை குறித்து விசாரணை?
Previous articleயானை தாக்கியதில் ஒருவர் மரணம்.
Next articleதடுப்பூசி போட்டவர்களுக்கு மாத்திரமே கொழும்பில் அனுமதி!