Home Local news யானை தாக்கியதில் ஒருவர் மரணம்.

யானை தாக்கியதில் ஒருவர் மரணம்.

மட்டக்களப்பு  கரடியனாறு பிரதேசத்தில், யானைத் தாக்குதலுக்கு இலக்காகி  ஒருவர் உயிரிழந்த சம்பம் நேற்று முன்தினம்  (20) இரவு இம்பெற்றுள்ளதாகப்  பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.
சம்பவதினத்தன்று அப்பகுதிக்குள் வந்த காட்டுயானைகள் அங்கிருந்த தென்னை மரங்களை சேதப்படுத்தியுள்ளன. இதன் போது அங்கிருந்த நபர் ஒருவரும்  யானையொன்றின்  தாக்குதலுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் கரடியனாறு கூமாச்சோலை சந்தி பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய கோணேசப்பிள்ளை சிறிராம் ஜீவா எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்  குறித்த சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டுவருவதாகத்   தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நாவில் நிறைவேற்றம்
Previous articleநல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதால் கிடைக்கும் நன்மைகள்;
Next articleஇலங்கையில் எரிபொருள் விலை குறையும் வாய்ப்பு?