Home Local news 124 மதுபான போத்தல்களுடன் ஐவர் கைது!

124 மதுபான போத்தல்களுடன் ஐவர் கைது!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் நிலையில், அனுமதிப்பத்திரமின்றி மதுபான போத்தல்கள் மற்றும் பியர் டின்களைக் கொண்டுச் சென்ற ஐவர், பொகவந்தலாவை பொலிஸாரால், நேற்று (21) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தோட்டப்புறங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக, சந்தேகநபர்கள் 124 மதுபான போத்தல்களையும் 48 பியர் டின்களையும் கொண்டு சென்ற போதே, கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவை பொலிஸாருக்க கிடைத்த தகவலுக்கமையவே, சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு,  பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன்,இவர்களுக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாகவும் பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  யாழில் சமூக சேவையில் ஈடுபட்டிருந்த பெண்ணுக்கு கொரோனா!!
Previous articleகட்டுப்பாட்டை இழந்த முற்சக்கர வண்டி; இரு சிறுவர்கள் பரிதாபமாக பலி!
Next articleதாலி கட்டும் நேரத்தில் நுழைந்த சுகாதாரத் துறையினர்!