Home Accident News கட்டுப்பாட்டை இழந்த முற்சக்கர வண்டி; இரு சிறுவர்கள் பரிதாபமாக பலி!

கட்டுப்பாட்டை இழந்த முற்சக்கர வண்டி; இரு சிறுவர்கள் பரிதாபமாக பலி!

ஹம்பேகமுவ – மயிலவல பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் சிக்கி சிறுவர்கள் இருவர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

வேலிஓய நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியானது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்தள்ளது.

சம்பவத்தில் 16 மற்றும் 17 வயதுடைய சிறுவர்கள் இருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  யாழில் சீனி மூடையை திருடியவர் சிக்கினார்
Previous articleசீனாவிடம் இலங்கை முன்வைத்துள்ள கோரிக்கை;
Next article124 மதுபான போத்தல்களுடன் ஐவர் கைது!