Home Local news எரிபொருள் விலையை குறைக்குமாறு கடிதம்!

எரிபொருள் விலையை குறைக்குமாறு கடிதம்!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்துள்ளதால் எரிபொருள் விலையை குறைக்குமாறு நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியுள்ளது.

ஜூலை 30 ஆம் திகதி 73 டொலருக்கு விற்கப்படும் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 62 டொலராக குறைந்து விட்டதாக குறித்த இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக சந்தையில் விலைகளின் அடிப்படையில் உள்ளூர் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டதால், எரிபொருள் விலை இப்போது குறைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  புதையல் தோண்டிய 6 பேர் கைது!
Previous articleஒசாமா பின்லேடனின் இறுதி நிமிடங்கள்; மனைவி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!
Next articleமுதலிரவை வீடியோ எடுத்து பணம், நகை பறிப்பு!