Home Local news தலிபான்களிடம் கோரிக்கை முன்வைத்த இலங்கை!

தலிபான்களிடம் கோரிக்கை முன்வைத்த இலங்கை!

தலிபான்களிடம் இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது தலிபான் ஆட்சியில் இருப்பதால், சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமையை உறுதிப்படுத்தவும், அங்குள்ள அனைத்து மக்களின் பாதுகாப்பு மற்றும் கௌரவத்தை பாதுகாக்கவும் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுக்கிறது என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அமைச்சு வெளியிட்ட அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, இஸ்லாமிய பாரம்பரியத்தைப் பின்பற்றி ஆப்கானிஸ்தானில் பெண்கள் வேலை செய்யலாம் மற்றும் பெண்கள் பாடசாலைக்குச் செல்லலாம் என்று தலிபான்கள் அளித்த உறுதிமொழிகளைக் கண்டு இலங்கை அரசாங்கம் மகிழ்ச்சியடைகிறது.

தலிபான்கள் பொதுமன்னிப்பு வழங்குவதாகவும், எந்த வெளிநாட்டினருக்கும் தீங்கு செய்ய மாட்டோம் என்று உறுதியளித்ததையும், அந்த உறுதிப்பாட்டை தொடர்ந்து மதிக்குமாறு தலிபான்களைக் கோருவதையும் இலங்கை அரசாங்கம் மகிழ்ச்சியடைகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஆப்கானிஸ்தானில் உள்ள மொத்த 86 இலங்கையர்களில் இதுவரை 46 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இன்றைய நிலவரப்படி, 20 இலங்கையர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளிவிவகார அமைச்சு அவர்களை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. இதேவேளை, 20 இலங்கையர்கள் ஆப்கானிஸ்தானில் தங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு உதவுமாறும் அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் அரசாங்கங்களையும் ஐக்கிய நாடுகள் சபையையும் வெளிவிவகார அமைச்சு கோரியுள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  கொரோனா பாணி பருகிய சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சிக்கும் கோரோனா
Previous articleநாவலடி பகுதியில் கைக் குண்டொன்று மீட்பு
Next articleதிருகோணமலை வைத்தியசாலையில் 5 கொவிட் மரணங்கள்!