Home jaffna news யாழ். நாவற்குழியில் தார் செப்பனிடும் வாகனம் தீப்பற்றியது!

யாழ். நாவற்குழியில் தார் செப்பனிடும் வாகனம் தீப்பற்றியது!

கைதடியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த, வீதிகளுக்கு தார் செப்பனிடும் வாகனம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நாவற்குழிக்கு அருகில் உள்ள பிரதான வீதியில் வைத்து இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் அறிந்து குறித்த இடத்திற்கு வந்த யாழ். மாநகரசபையின் தீயணைப்பு படையினர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  தனியார் பஸ்ஸில் சென்ற 13 பேரிற்கு நேர்ந்த பரிதாபம்
Previous articleநாடு முடக்கப்படும் காலத்தை குறைக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்!
Next articleநாவலடி பகுதியில் கைக் குண்டொன்று மீட்பு