Home Local news நேற்றைய தினம் 198 கொவிட் மரணங்கள்; இதுவரை 7183 மரணங்கள் பதிவாகியுள்ளன;

நேற்றைய தினம் 198 கொவிட் மரணங்கள்; இதுவரை 7183 மரணங்கள் பதிவாகியுள்ளன;

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்நிலையில் நேற்று 198 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று உறுதிப்படுத்தப்பட்டு அரசாங்க தகவல் திணைக்களத்தினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், 81 பெண்களும் 117 ஆண்களும் கொரோனா தொற்றால் மரணித்துள்ளனர்.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 7,183 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் நாளொன்றில் பதிவான அதிக கொரோனா மரணங்கள் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  ஹிஷாலினியின் அறையில் சிக்கிய புடவைத்துண்டு
Previous articleஎரிபொருள் பற்றாக்குறை தொடர்பாக கருத்து வெளியிட்டவர் கைது!
Next articleமுற்றாக முடங்கியது திருகோணமலை.