Home Local news எரிபொருள் பற்றாக்குறை தொடர்பாக கருத்து வெளியிட்டவர் கைது!

எரிபொருள் பற்றாக்குறை தொடர்பாக கருத்து வெளியிட்டவர் கைது!

எரிபொருள் பற்றாக்குறை குறித்து ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்ட இலங்கை பெற்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தேசிய ஊழியர் சங்க செயலாளர் ஆனந்த பாலித, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

எரிபொருள் கையிருப்பு மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சரின் அதிகாரப்பூர்வ வீட்டின் மறுசீரமைப்பு செலவு பற்றி கருத்து வெளியிட்டதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேமிப்பில் உள்ள எரிபொருள் 11 நாட்களுக்கு மட்டுமே போதுமானது என நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஆனந்த பாலித  கூறியிருந்தார்.

நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இருப்பதாகக் கூறி மக்களை தவறாக வழிநடத்தியதற்காக அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சீஐடி தெரிவித்துள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  வெள்ளவாய பொலிஸ் நிலையத்தில் 17 பேருக்கு கொரோனா
Previous articleவேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டார்சைக்கிள் விபத்து; 29 வயது இளைஞர் உயிரிழப்பு!
Next articleநேற்றைய தினம் 198 கொவிட் மரணங்கள்; இதுவரை 7183 மரணங்கள் பதிவாகியுள்ளன;