Home Local news வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டார்சைக்கிள் விபத்து; 29 வயது இளைஞர் உயிரிழப்பு!

வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டார்சைக்கிள் விபத்து; 29 வயது இளைஞர் உயிரிழப்பு!

மாத்தளை மாவட்டத்தின் கலேவெல பொலிஸ் பிரிவுகுட்பட்ட மஹவெஹெர பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மாத்தளையிலிருந்து கலேவெல நோக்கிப் பயணித்த மோட்டார்சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்று மின்சாரத் தூண் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த நபரை கலேவெல வைத்தியசாலையில் சேர்த்தபோதிலும் குறித்த நபர் வைத்தியசாலையில் சேர்க்கப்படும்போது உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் பிரேத பரிசோதனைக்காக சடலம் கலேவெல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  வன்னியில் பட்டதாரி மாணவியின் புதிய முயற்சி
Previous articleஅரச ஊழியர்களின் சம்பளத்திற்கு என்ன நடக்கும்?
Next articleஎரிபொருள் பற்றாக்குறை தொடர்பாக கருத்து வெளியிட்டவர் கைது!