Home Local news கிணற்றில் விழுந்த பெண்ணிற்கும், மயங்கி விழுந்த பெண்ணிற்கும் கொரோனா; வவுனியாவில் சம்பவம்.

கிணற்றில் விழுந்த பெண்ணிற்கும், மயங்கி விழுந்த பெண்ணிற்கும் கொரோனா; வவுனியாவில் சம்பவம்.

வவுனியாவில் உயிரிழந்த இரு இளம் பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் கிணற்றில் விழுந்த பெண் ஒருவர் அயலவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவத்தில் 28 வயதான குடும்ப பெண்ணே உயிரிழந்தார். இந்நிலையில் அவருக்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று பீடித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதேவேளை வவுனியா குருமன்காடு பகுதியில் திடீர் என மயங்கி விழுந்த 35 வயதான பெண் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

அவருக்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று பீடித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து உயிரிழந்த இருவருக்கும் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  யாழை புரட்டிப் போட்ட புரெவி - மூவரைக் காணவில்லை - 1589 பேர் பாதிப்பு
Previous articleஆடை தைக்க சென்ற சிறுமி மாயமானதால் பரபரப்பு!
Next articleவைத்தியசாலைகளில் தரமற்ற உணவாம்? கொவிட் நோயாளிகள் முறைப்பாடு!