Home Local news வீதியில் சுற்றித்திரிந்த இருவருக்கு கொரோனா!

வீதியில் சுற்றித்திரிந்த இருவருக்கு கொரோனா!

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நிலையில்   வவுனியா நகரில் சுற்றித்திரிந்தவர்களுக்கு நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் இருவருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக வவுனியா நகரின் முக்கிய பகுதிகளில் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸாரின் ஏற்பாட்டில் இன்று காலை அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, எ9 வீதி நீதிமன்றத்திற்கு அருகாமையில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் 2 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து குறித்த இருவரும் தனிமைப்படுத்தல் மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

குறித்த நடவடிக்கைகளை மாவட்ட மேலதிக அரச அதிபர் தி.திரேஸ்குமார் பார்வையிட்டிருந்ததுடன், குறித்த செயற்பாட்டினை அனைத்து பகுதிகளிற்கும் விஸ்தரிப்பது தொடர்பாக ஆலோசனைகளையும் வழங்கியிருந்தார். R

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  சினிமா பாணியில் இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர் செய்த சாகச செயல்!
Previous articleசீனிக்குள் ரவை; வவுனியாவில் பரபரப்பு!
Next articleமருந்து வகைகள், மருத்துவ உபகரணங்களுக்கு அதிகபட்ச சில்லறை – வெளியானது வர்த்தமானி!